மு.கா.- த.தே.கூ. இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- ஹிஸ்புல்லாஹ் அறிக்கை

271 0

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்..; இவ்வாறான இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக  திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும், அதில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்விடயத்தினை முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக’ குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டது உண்மையெனில் முஸ்லிம் காங்கிரஸ{க்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அவ்வாறு உடன்பாடு காணப்பட்டுள்ளதா? அந்த உடன்பாடு என்ன? முஸ்லிம் அலகு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதா? போன்ற விடயங்களை இரு கட்சித் தலைமைகளும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் நாங்கள் வடக்கு -கிழக்கு இணைப்பு விடயத்தில் நிதானமாகவும், அவதானமாகவும் பேசுவோம். இவ்வாறான இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வைத்தே இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன்.

எனினும், எமது சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பும் போது அதனைப் பிரிவினைவாதக் கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கின்றனர். நான் அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியே பேசியிருந்தேன் என அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Leave a comment