மகிந்தவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

399 0

நாட்­டின் அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி மூன்­றாண்­டு­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.

இந்த மூன்று வருட காலப்­ப­கு­திக்­குள் கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தமிழ்­மக்­கள் நிம்­ம­தி­யாக வாழ்ந்­தார்­களா? என்ற வினா­வுக்கு இல்லை என்­று­தான் பதில் கூற முடி­யும்.

மைத்­திரி அரசு தமிழ் மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்­தையே தந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதே இன்­றைய யதார்த்த உண்மை.

கூட்டு அர­சின் ஆட்­சி­யும் மகிந்­த­வைப் போன்­றதே

மைத்­தி­ரி­யின் கூட்டு ஆட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. மகிந்த ராஜ­பக்ச அர­சின் காலத்­தில் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­ததைப் போலவே மைத்­திரி அர­சி­லும் அவை தொட­ரு­கின்­றன.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­கள், தள­ப­தி­க­ளின் கைது­கள், மத்­திய கிழக்கு நாடு­க­ளில் வேலை வாய்ப்­புக்­கா­க­வும் புலம் பெயர்ந்­தும் வாழ்­ப­வர்­கள் சுதந்­தி­ர­மாக கட்­டு­நா­ய­கக்க விமான நிலை­யம் ஊடா­கப் பய­ணிக்க முடி­யா­த­நிலை என்பன தற்போதும் நிலவுகின் றன.

மத்­திய கிழக்கு நாடு­க­ளில் வேலை­வாய்ப்­புக்­கா­கச் சென்­ற­வர்­க­ளும் ஐரோப்­பிய நாடு­க­ளில் புலம் பெயர்ந்து வாழ்­ப­வர்­க­ளும் நாடு திரும்­பிய சந்­தர்ப்­பங்­க­ளில் கடந்த ஆட்­சி­யில் இடம்­பெற்­ற­தைப்­போல் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நான்­காம் மாடி­யி­லும் ஏனைய சிறைச்­சா­லை­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மைத்­திரி நாட்­டின் அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்று மூன்று மாத­கா­லப்­ப­கு­திக்­குள் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து ஆரம்­ப­மாகி, படை­யி­ன­ரின் துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­காகி இளை­ஞர்­கள் படு­கொலை செய்­யப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­கள் இன்­றைய அர­சின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­க­ளா­க­வே­யுள்­ளன.

தமிழ் மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அரச படை­யி­னர் உள்­ள­னர்

யாழ். குட­நாட்­டில் பொலி­ஸார், இரா­ணு­வம், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரின் பிர­சன்­னம் ஆகி­யன தமிழ் மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்­குள்­ளும் அவர்­க­ளின் தலை­யீ­டு­கள் பெரு­ம­ள­வில் இடம்­பெ­று­கின்­றன.

அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தைச் சேர்த்து வைத்­துக் கொண்டு கூட்டு அரசு இணக்க ஆட்சி, தேசிய ஆட்சி, என்­றெல்­லாம் வியாக்­கி­யா­னம் பேசு­வ­தன் மூலம் முழு உல­கத்­தையே ஏமாற்றி வரு­கின்­றது.

மகிந்த ஆட்­சி­யின்­போது தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் நில­விய பார­தூ­ர­மான சிரம நில­மை­க­ளில் எதை­யுமே ஒரு முடி­வுக்கு இன்­றைய கூட்டு ஆட்சி கொண்டு வர­வில்லை என்ற கடும் விமர்­ச­ னங்­களை பன்­னாட்டு தரப்­புக்­கள் பல கோணங்­க­ளில் முன்­வைத்து வரு­கின்­றன.

தமிழ்­மக்­க­ளும் பல­த­ரப்­பட்ட தமது நியா­ய­மான கோரிக்­கை­க­ளோடு வீதி­க­ளில் நின்று அற­வ­ழிப் போராட்­டங்­களை இன்று வரை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இரா­ணு­வக் கெடு­பி­டி­க­ளி­ல்­இருந்து இன்­ன­மும் விடு­ப­டாத நிலை­யி­லும், சுத்­த­மான நிலத்­தடி நீரைக்­கூ­டத் தமது சொந்­தக் கிண­று­க­ளி­ல்­ இருந்து பெற்­றுக் கொள்­ள­மு­டி­யாத சூழ்­நி­லை­யி­லும் தமிழ்­மக்­கள் அவ­தி­யுற்று வரு­கின்­ற­னர்.

வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் இரா­ணுவ முகாம்­க­ளைக் குறைப்­பது, படை­யி­ன­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது குறித்து கூட்­டாட்சி அரசு எள்­ள­வே­னும் சிந்­திப்­ப­தும் இல்லை.

அர­சி­யல் கைதி­க­ளுக்கு விடி­வில்­லாத நிலை

சிறைச்­சா­லை­க­ளில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ்க் கைதி­கள் கடந்த மூன்று வரு­ட­ கா­லத்­தில் பொது மன்­னிப்பு வேண்­டித் தங்­க­ளது உணவு ஒறுப்­புப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தா­லும், கூட்டு அர­சி­னால் அவர்­க­ளின் விடு­தலை சம்­பந்­த­மாக துரி­த­மான நட­வ­டிக்­கை­யெ­டுக்க இய­லாது போயுள்­ளது.

படைத்­த­ரப்­பி­னால் போர் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்ட பின்­னர் சர­ண­டைந்த புலி­க­ளின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு என்ன நடந்­தது? காணா­மல் போனோர்­க­ளின் உற­வு­கள் அவர்­க­ளைக் கண்­ட­றிந்து தரு­மாறு வேண்டி மகிந்த அர­சி­ட­மும் உரத்­துக் குரல் கொடுத்­தமை போன்றே மைத்­திரி அர­சி­ட­மும் கோரிக்கை முன்­வைத்து இரவு பக­லாக பல போராட்­டங்­களை நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

ஆனால் கூட்டு அரசு அவர்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு எந்­த­வி­த­மான பதி­லை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்­காது ஏமாற்றி வரு­கின்­றது.

தலைமை அமைச்­ச­ரின் பொறுப்­பற்ற பதில்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னர் ஒரு தடவை ‘‘காணா­மல் போனோர்­கள் என்று கரு­தப்­ப­டு­ப­வர்­கள் வெளி­நாடு தப்­பிச்­சென்­றி­ருக்­க­லாம்’’ என்று பொறுப்­பற்ற விதத்­தில் பதில்­கூறி காணா­மல் போனோர்­க­ளின் உற­வு­க­ளின் மன­தில் ஆழ­மான காயங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ்­மக்­க­ளின் பூர்­வி­க­மான நிலங்­கள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளும், புத்­தர் சிலை­களை நிறு­வு­த­லும், பௌத்த விகா­ரை­களை நிறுவு­வ­தி­லும் மைத்­தி­ரி­யின் ஆட்­சி­யி­லும் சர்­வ­சா­தா­ர­ண­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

இரா­ணு­வத்­தி­ன­ரின் பக்­க­ப­ல­மும், ஆத­ர­வும் அவற்­றுக்கு முழு­மை­ யா­கக் கிடைக்­கின்­றன.

வட­கில் தலை­தூக்­கும் பௌத்த கலா­சா­ரம்

யாழ்ப்­பா­ணத்­துக்­கான முக்­கிய நுழை­வா­யி­லான நாவற்­கு­ழி­யில் பௌத்த விகாரை நிறு­வும் முயற்­சி­ யில் அரசு ஈடு­பட்டு வரு­கின்­றது. இரா­ணு­வத் தள­ப­தி­யான ஒரு­வர் இதற்­கான அத்­தி­பா­ரக்­கல்லை நட்டு­வைத்­துள்­ளார்.

நயி­னா­தீவு கடற் பரப்­பில் மிக உய­ர­மான புத்­தர் சிலையை நிறு­வு­வ­தற்­கான பெரு முயற்­சி­களை நயி­னா­தீவு பௌத்த விகா­ரை­யின் பீடா­தி­பதி செய்து கொண்­டி­ருக்­கின்­றார்.

திருக்­கே­தீஸ்­வ­ரத்­தில் புத்­தர்­சிலை ஏற்­க­னவே திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கை­யும் பௌத்த கலா­சா­ர­மாக மாற்­றி­ய­மைக்­கின்ற திட்­டத்­தில் மைத்­திரி அரசு தானும் சளைத்­தது அல்ல என்­ப­தை­யும், தனது பௌத்த சிங்­கள மேலா­திக்க நிலைப்­பாட்­டால் மற்­ற­வர்­க­ளுக்கு நிரூ­பித்து வரு­கின்­றது.

அரச தலை­வ­ரும் இந்த விட­யத்­தில் நேர­டி­யா­கத் தலை­யிட்டு அவற்றை தடுத்து நிறுத்த இய­லாத கையறு நிலை­யில் உள்­ளார்.

போர் முடி­ வுற்று எட்டு ஆண்­டு­கள் முடி­வ­ டைந்­த­தும் தங்­கள் பூர்­வீக நிலங்­க­ளுக்­குத் திருப்­பிச் சென்று நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யைத் தொட­ர­மு­டி­யாது இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­கள் தவிக்­கின்­ற­னர்.

போர் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டு­கள் கழிந்­தும், போரி­னால் பாதி।க்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்க்­கை­யில் எந்த வித முன்­னேற்­றத்­தை­யும் காண, ஏற்படுத்த முடி­ய­வில்லை.

குறிப்­பாக வன்­னிப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­கள் போர் நட­வ­டிக்கை கார­ண­மா­கப் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­க ­தா­கும்.

பாதிக்­கப்­பட்ட மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யா­கவோ, வேறு வழி­க­ளிலோ முன்­னேற்­று­வ­தற்­கான மார்க்­கங்­கள் போது­மான அளவு இல்­லாத நிலையே தொடர்ந்து வரு­கின்­றது.

போர் முடிந்த பின்­னர் ஏற்­பட்ட அமை­தி­யைத்­த­விர வேறு எத­னை­யும் காண­மு­டி­யாது தமிழ் மக்­கள் வெறுப்­புற்­றுள்­ள­னர். தமிழ்ப் பகு­தி­க­ளுக்கு அரச தலை­வர் தொடக்­கம் சகல அமைச்­சர்­க­ளும் அடிக்­கடி வந்து செல்­கின்­ற­னர்.

ஆனால் இவர்­க­ளில் எவ­ரா­லும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­க­மு­டி­ய­வில்லை.

தமி­ழர்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சினையேனும் கூட்டு அர­சால் தீர்க்­கப்­ப­ட­வில்லை

இன்­றைய மைத்­திரி – ரணில் கூட்டு அர­சி­லும் தமிழ்­மக்­கள் தொடர்ச்­சி­யா­கப் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளான நிலை­யில் அதி­லி­ருந்து மீள முடி­யா­த­வர்­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தீர்த்து வைக்­கப்­ப­டா­மல் இருப்­ப­த­னால் அவர்­கள் இந்த அரசின் மீது அதி­ருப்­தி யுடனும் பெரும் மன உளைச்­சல்­க­ளு­டனும் காணப்­ப­டு­கின்­ற­னர் என்று சுட்­டிக் காட்­டப்­ப­டு­கின்­றது.

போர் கார­ண­மாக அங்­க­வீ­ன­ம­டைந்­த­வர்­கள், வித­வை­கள், போரா­ளி ­க­ளின் குடும்­பங்­கள், பெற்­றோரை இழந்த பிள்­ளை­கள் போன்­ற­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் இன்­றும் துன்­ப­க­ர­மா­ன­தா­கவே இருக்­கி­றது.

குறைந்த பட்­சம் தமிழ்­மக்­க­ளின் இன்­றைய அடிப்­ப­டைப் பிரச்­சி­னை க­ளை­யே­னும் கூட்டு அரசு தீர்த்து அவர்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்ப முன்­வ­ரா­தமை தமிழ் மக்­கள் மத்­தி­யில் மைத்­திரி அரசு மீதான நம்­பிக்­கையை சித­ற­டித்து வரு­கின்­றது.

கடந்த வரு­டம் முல்­லைத்­தீவு கொக்­குத்­தொ­டு­வாய் பகு­தி­யில் அத்­து­மீறி கடற்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வந்த தென் னி­லங்­கை­யைச் சேர்ந்த மீன­வர்­க­ ளி­டம் தக­வல் சேக­ரிக்­கச் சென்ற அப்­ப­குதி கிராம அலு­வ­லர் குறித்த மீன­வர்­க­ளால் தாக்­கப்­பட்­டி­ருந்­தார்.

மீன­வர்­க­ளின் தக­வ­லை­ய­டுத்து அவ்­வி­டத்­துக்கு விரைந்து வந்த இரா­ணு­வத்­தி­னர் குறித்த கிராம அலு­வ­லரை மிக­வும் தரக்­கு­றை­வாக நடத்­தி­யி­ருந்­த­னர்.

இரா­ணு­வப் பிர­சன்­னம் முல்­லைத்­தீ­வில் அதி­கம்

முல்­லைத்தீவு மாவட்­டத்­தில் பொது­மக்­க­ளில் இரு­வ­ருக்கு ஒரு இரா­ணு­வச் சிப்­பாய் என்ற அடிப்­ப­டை­யில் இரா­ணு­வப் பிர­சன்­னம் அதி­க­ரித்­துள்­ளது என்று வடக்­கு­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரான வ.ரவி­க­ரன் வடக்கு மாகா­ண­ச­பை­யின் 108ஆவது அமர்­வின்­போது சுட்­டிக் காட்­டி­யி­ருந்­தார்.

வடக்­கில் சிவில் நிர்­வா­கமா? அல்­லது இரா­ணுவ ஆட்­சியா நடை­பெ­று­கின்­றது என கடந்த வரு­டம் எப்­ரல் மாதத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யில் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.

கடந்த வரு­டம் ஒக்­டோ­பர் மாதம் கொக்­கு­வில் காங்­கே­சன் துறை­வீ­தி­யில் இரவு நேரம் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பொலி­சா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர்.

அண்­மை­யில் வட­ம­ராட்­சி­யில் ஒரு இளை­ஞ­னும், அரி­யா­லை­யில் மற்­று­மொரு இளை­ஞ­னும் படை­யி­ன­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் அரி­யாலை மணி­யம் தோட்­டப்­ப­கு­தி­யில் சுட்­டுக்­கொல்­லப் பட்ட இளை­ஞ­ரின் சாவு சம்­பந்­த­மாக விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மீது பலத்த சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்­புப் படை­யி­ன­ரையோ, முகாம்­க­ளையோ எக்­கா­ர­ணம் கொண்­டும் வட­ப­கு­தி­யில் இருந்து அகற்­ற­மு­டி­யாது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­ வர்த்­த­னவும், வடக்கு– கிழக்­கில் இருந்து இரா­ணுவ முகாம்­களை துரித கதி­யில் அகற்­று­வது பொருத்­த­மற்ற விட­யம் என இரா­ணு­வத் தள­ப­தி­யான லெப்­டி­னன்ட் ஜென­ரல் மகேஷ் சேன­நா­யக்­க­வும் ஒக்­டோ­பர் மாத இறு­தி­யில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கடும்­போக்கு இருந்­தால் நல்­லி­ணக்­கம் ஏற்படாது

அர­சைப் பொறுத்த வரை­யில் தமி­ழர் விவ­கா­ரம் தொடர்­பில் இத்­த­கைய கடும் போக்­கு­களே தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­த­னால் உண்­மை­யான நல்­லி­ணக்­கம் எப்­படி ஏற்­ப­டும்? தமிழ்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பி­ னர்­க­ளும் இந்­தப் பிரச்­சி­னை­கள் சம்­பந்­த­மா­கப் பல தடவை நாட­ளு­மன்­றத்­தில் எடுத்து விளக்­கி­யி­ ருந்­த­னர்.

மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு தமிழ்­மக்­க­ளு­டன் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­ற­பின்­னர் மைத்­திரி தெரி­வித்­தி­ருந்­தார்.

அப்­போது பன்­னாட்­டுச் சமூ­கம் அத­னைப் பாராட்­டி­யி­ருந்­தது. ஆயி­னும் அவர் வழங்­கிய அந்த உறு­தி­மொ­ழி­கள் இன்­று­வரை செயல்­வ­டி­வம் பெற­வில்லை. தமி­ழர்­கள் தமது அர­சி­யல் உரி­மை­க­ளுக்­கப்­பால் தமது அடிப்­படை உரி­மை­க­ளுக்­கா­கப் போராடி வரு­கின்­ற­னர்.

ஆனால் இவற்­றில் எது­வும் நிறை­வே­றாத தொன்­றா­கவே இருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இன்று எவர் மீது நம்­பிக்கை வைப்­பது என்று தெரி­யாத நிலை­யில் தர்­ம­சங்­க­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­ற­னர். மொத்­தத்­தில் கூட்டு அர­சும் தமிழ் மக்­க­ளுக்கு வேட்டு அர­சா­கவே மாறி­யுள்­ளது.

 

Leave a comment