பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் -வடமாகாண முதலமைச்சர்-

311 0

land-hand-over-445பேராதனை பல்கலைக்கழத்தில் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மாணவர்களுடைய பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று அனுப்பிவைத்தள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
பேராதனை பல்கலைக்கழகக் கல்விபயிலும் இணைந்தசுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்ததமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை இன்று காலை எனது வதிவிடத்தில் சந்தித்தனர்.
அவர்கள் எழுத்து மூலமாக எனக்கொருவேண்டுகோளை முன்வைத்தனர். அதில் அவர்கள் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமதுகடமையாகும்.
தாங்கள் இப்படியான பாதுகாப்பை யாழ்ப்பாணத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள். அதேபோல இத்தமிழ் மாணவர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்படி உங்களுக்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
இதன் மூலம் தான் அம் மாணவர்களின் பெற்றோரை பேராதனையில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்விபயில அனுமதிக்குமாறுகோரவும் அவர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். எதிர்வரும் 29ம் திகதிதிங்கட்கிழமை மீண்டும் அங்கு வகுப்புகள் நடைபெறவிருக்கினற பொழுதிலும் அங்குள்ள சிரே~;ட மாணவர்களால் அவர்களுக்கு தீங்குஏற்படுமென எண்ணி அவர்களை அங்கு செல்ல அனுமதிப்பதில் விருப்பமற்றிருக்கிறார்கள்.
அங்கு இடம்பெற்றசம்பவங்கள் தேவையற்றனவாகவேகாணப்படுகின்றன. பொதுவாக முதலாம் ஆண்டுமாணவர்களுடைய “கோரிக்கைக் கூட்டங்கள்” (Request Meetings) இரவில் தான் நடைபெறுவதுண்டு. ஆனால் அவைபற்றி அன்றன்றைய தினம் காலை 6 மணியளவில் நேரகாலத்தோடு அறிவிக்கப்படுவதுண்டு. ஆனால் சம்பவம் நடந்த இரு நாட்களிலும் இரவில் மிகவும் தாமதமாகநடுநிசிக்கு அரைமணித்தியாலத்திற்கு முன்பதாகத்தான் அக் கூட்டங்களுக்கான அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து முதலாம் வருடமாணவர்களுக்கு எதிராகவேண்டுமென்றேகுழப்பத்தை ஏற்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்காகவே இப்படியாகத்தாமதமாக வேண்டுகோள் திட்டமிட்டு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. காயப்பட்டசிலர் இப்பொழுதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
தங்களிடமிருந்து ஒரு சாதகமானபதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.