நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பத்திற்கு ஹமீஸ் ஆதரவுக் குரல்

343 0

நியூசிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பம் ஒன்றுக்கு ஆதரவாக, அந்த நாட்டு குடிவரவு அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஷாம், டினேஷா என்ற இந்த இலங்கைத் தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் சுமார் எட்டு வருடங்கள் நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளனர்.

குயின்லாந்தில் சமையல்காரராக பணியாற்றிய டினேஷாவுக்கு விசா புதுப்பிக்க மறுக்கப்பட்டுள்ளமையால், குறித்த குடும்பம் எதிர்வரும் 21ம் திகதி நாடுகடத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக, நியூசிலாந்து குடிவரவு அமைச்சருக்கு, குல்தா சவுத்லேண்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஹமீஸ் வொல்கர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர்களது நாடுகடத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், ஷாமுக்கு தற்காலிகமாக பணியாற்றும் வகையிலான விசாவை வழங்குமாறும், அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

Leave a comment