பத்திரிகைகளிடம் நட்டஈடு கோரும் ரிஷாட்!

355 0

maxresdefault-2-e1469602226295இரு பத்திரிகை நிறுவனங்களிடம் ஒரு கோடி நஷ்டஈடு கோரி சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் தன்னை தொடர்புபடுத்தி அவதூறு செய்தி வெளியிட்ட இரு பத்திரிகை நிறுவனங்களிடமே அவர் இவ்வாறு நஷ்டஈடு கோரியுள்ளார்.

சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகிய அமைச்சர், அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், இந்த அரிசி இறக்குமதி விடயத்தில் எந்தவொரு சம்பந்தமும் இல்லாத என் மீது சில ஊடகங்கள், வேண்டுமென்றே கட்டுக் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பின.

பொய்யாகப் புனையப்பட்ட செய்தியை வேண்டுமென்றே அப்பத்திரிகைகள் பிரசுரித்ததனால், அப்பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக ஒரு கோடி நஷ்டஈடு கோரி எனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் ஊடக தர்மத்தை அவை மதித்து நடக்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும், 2010 – 2015 ஜனவரி 10ஆம் திகதி வரை சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது. அது தொடர்பாக அவர்கள் எதிர்பார்த்த தகவல்களை தற்போதைய அமைச்சர் என்ற வகையில், நான் வழங்கியதுடன் இனிவரும் காலங்களிலும் இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.