முல்லைத்தீவு பிலக்குடியிருப்பிலுள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இணங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை ஆராயப்பட்டு இறுதியில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து போராடி பெற்றிருந்தனர். ஆனால் அவர்களது காணிகளில் அவர்களுக்கு என்று வீடுகள் வழங்கப்படவில்லை. தற்போது தறப்பால் கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றோம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்துத் தமக்கு வீடுகள் அமைத்துத் தருமாறு கோரியிருந்தனர்.
இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிலக்குடியிருப்பு சார்பாகக் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிக ளும் கோரினர். இந்த விடயம் நேற்றுப் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
“மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேச மக்களுக்கென இராணுவத்தினரால் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. வீடுகள் அரச செலவில் அமைக்கப்பட்டன. அதனால் குறித்த பிரதேச மக்களுக்கு மீண்டும் புதிதாக வீடுகளை வழங்க முடியாத நிலை உள்ளது” என்று மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
அதன்போது குறுக்கிட்ட பிலக்குடியிருப்பு மக்கள்பிரதிநிதிகள், “அமைத்துத் தரப்பட்ட வீடுளுக்கு சரியான முறையில் அத்திவாரம் இடப்படவில்லை. உரியவாறு கட்டப்படவில்லை. அதனை இராணுவமே அமைத்துத் தந்தனர்” என்று தெரிவித்தனர்.
“அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் சுவர்ப் பகுதிகளில் ஒரு பக்கத்தில் சுரண்டினால் மறுபக்கம் விரல் சென்றுவிடும். அவ்வாறான தரங்குறைந்த வீடுகளே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக அவர்களது காணிகளில் உடனடியாக வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டும்” என்று மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெளிவுபடுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினருடன் இணைத் தலைவர் சிவமோகன் கலந்துரையாடினார்.
அவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்க அதிகார சபையினர் இணக் கம் தெரிவித்தனர். அதனையடுத்து குறித்த பிரதேச மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவும் கலந்துகொண்டிருந்தார்.

