முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லையின் குறைபாடுகள் நீக்கப்படும்!

368 0

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட பலர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.

நோயா­ளர்­கள் மட்­டு­மன்றி அதி­கா­ரி­க­ளும் பெரும் அசௌ­க­ரி­யத்­தினை சந்­தித்­த­மையே வைத்­தி­ய­சா­லை­யின் வர­லா­றா­க­வுள்து என மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் குற்­றச்­சாட்­டுக்­கள் அடுக்­கப்­பட்­டன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் மாவட்­டச் செய­ல­கத்­தில் இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தலைமை­யில் இடம்­பெற்­றது. இதன்­போதே மேற்­படி கருத்து பல­ரா­லும் சுட்­டிக்­காட்டப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­கான முதன்மை வைத்­தி­ய­சா­லை­யான மாஞ்­சோலை வைத்­தி­ய­சாலை பெய­ர­ள­வி­லாள வைத்­தி­ய­சா­லை­யாக மட்­டுமே உள்­ளது. இங்கு நோயா­ளர்­கள் பெரும் சிர­மத்­தையே எதிர்­கொள்­கின்­ற­னர். இவை இன்­று­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை.

அது மட்­டு­மன்றி அங்குள்ள மருத்­து­வர்­களும், தாதி­யர்­களும் பொறுப்­பின்­றியே செயல்­ப­டு­கின்­ற­னர். நோயா­ளர்­க­ளைக் கவ­னிப்­பதே கிடை­யாது. எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

‘‘ஒரு­நாள் குருதி அழுத்­தம் ( பிற­சர் ) பரிசோதிக்­கச் சென்ற என்னை விடு­தி­யில் தங்கி நிற்­கு­மா­றும் அவ்­வா­றா­னால் மட்­டுமே பார்­வை­யிட முடி­யும் என்றும் கூறினர். அதனால் திரும்பிவந்து விட்டேன்’’ என்­றார்.

மாவட்­டச் செய­லா­ளர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன், ‘‘ஓர் நாள் ஏற்­பட்ட காயத்­துக்கு அவ­ச­ர­மா­கச் சென்ற நான் பெரும் அசௌ­க­ரி­யத்­தி­னைச் சந்­தித்­த­மையே வர­லா­றா­க­வுள்­ளது. குறித்த வைத்­தி­ய­சாலை தொடர்­பில் புகார்­களே முன்­வைக்­கப்­ப­டு­ கின்­றன’’ என்­றார்.

இவ்­வாறு அந்த வைத்­தி­ய­சாலை தொடர்­பில் கூட்­டத்­துக்கு வந்த பல­ரும் குற்­றச் சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.

இறு­தி­யில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் குண­சீ­லன் இது தொடர்­பில் கருத்­து­ரைத்­தார்.

‘‘மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யின் நிர்­வாகி தற்­போது மாற்­றப்­பட்டு வைத்­தி­ய­சாலை ஓர­ளவு சீர் செய்­யப்­ப­டு­கின்­றது.அதன் வழி­யில் ஏனைய குறை­பா­டு­க­ ளும் சீ்ர்செய்­யப்­பட்டு நேர்த்­தி­யான சேவைக்கு வழி செய்­யப்­ப­டும்” என்­றார்.

Leave a comment