எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகரான புதிய கூட்டணி?

311 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி புதிய அரசியல் கட்சியொன்றை தாபிக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வகையில் செயற்படும் அணியொன்றை உருவாக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய அனைத்து ஆணைகளையும், தமிழரசுக் கட்சி மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக தமிழரசு கட்சி மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகராக புதிய மாற்று அணியொன்றை உருவாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் புதிய கூட்டணியொன்று உருவாவதற்கான சாத்தியகூறுகள் மிகப் பலமாக காணப்படுவதாகவும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a comment