மங்களவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் – டிலான்

319 0

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு செலவுத் திட்டம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளை இம்புல்கொட பிரதேசத்தில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்கக் கூடியதும், சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கக் கூடியதும், செல்வந்தர்களிடமிருந்து வரி அறவிடக் கூடியதும், உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டக் கூடியதும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக் கூடியதும், இனநல்லிணக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக் கூடியதுமான ஒரு வரவு செலவுத் திட்டத்தை மங்கள சமரவீர முன்வைத்துள்ளார். இது வரவேற்கத் தக்க ஒரு வரவு செலவுத் திட்டம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment