முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

5208 21

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம், வைரவப்புளியங்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவு தின நிகழ்வு, வைரவப்புளியங்குளத்தில் அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரனியும், அமரர் சிவசிதம்பரத்தின் உருவச்சிலையை நிறுவியவருமான முருகேசு சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு, மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a comment