டெங்கு நோய் காரணமாக 400 பேர் வரை மரணம்

4433 12

டெங்கு நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 பேர் வரையில் மரணித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 502 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு, கல்முனை, கண்டி மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் டெங்குப் பரவல் அதிகம் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a comment