தமிழரசுக் கட்சி கூட்டத்தில் கைகலப்பு

6453 20

முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்று (05) நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ். சிவமோகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அங்கு மோதல் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த மோதல் ஆரோக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னரும் சிலர் வீதியில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பொலிஸாருக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமலேயே இந்த அரசியல் கூட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.

Leave a comment