ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

242 0

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பவள விழா மலரை வெளியிட்டும், சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது, சாதனையாளர் விருதுகளை வழங்கியும் உரையாற்றினார்.

ஊடகங்களின் பணிகள் குறித்து அவர் பேசும்போது, ‘ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன. அதே ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றியும் இருக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை பத்திரிகைகள் தவறாக பயன்படுத்துவது குற்றமாகும். ஊடகங்கள் நம்பத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a comment