கோடம்பாக்கத்தில் மழை வெள்ளம்: 4-வது நாளாக அமைச்சர்கள் ஆய்வு

220 0

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளை அமைச்சர்கள் 4-வது நாளாக ஆய்வு செய்தனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, சரோஜா ஆகியோர் தொடர்ந்து 4-வது நாளாக இன்று மண்டலம் 9-க்கு உட்பட்ட நொச்சி நகர், 13-க்கு உட்பட்ட எம்.ஆர்.சி. நகர், வசந்தம் அவன்யூ பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தனர். கோடம்பாக்கம், என்.ஜி.ஓ. காலனியில் தேங்கி இருந்த மழைநீர் புதிய கால்வாய் வெட்டி வெளியேற்றப்பட்டது.

இதேபோல ஜாபர்கான்பேட்டை, தங்கவேல் நகர் பகுதியில் ஆற்றுநீர் குடியிருப்புக்குள் வருவதை தடுக்க ஆலோசனையும், சந்தியா நகர், பாபு காலனியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் சத்யா, நடராஜன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a comment