இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச கிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் நேற்றையதினம்(5) நடைபெற்றது
கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் நிர்வாக தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன நேற்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனடிப்படியில் முன்னதாக கரைதுறைப்பற்று மூலக்கிளையின் நிர்வாக தெரிவுக்கூட்டம் காலை பத்துமுப்பது மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை பொது மண்டபத்தில் நடைபெற்றது
அதனை தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய மண்டபத்தில் இடம்பெற்றது
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன்,மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

