சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில், சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டார். பவள விழா மலர், விழா மேடையில் இருந்த தலைவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது மற்றும் சாதனையார் விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். சிறந்த இலக்கிய நூலுக்கான இலக்கிய பரிசு ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கும், மூத்த தமிழறிஞர் விருது ஈரோடு தமிழன்பனுக்கும், சாதனையாளர் விருது தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷத்துக்கும் வழங்கப்பட்டது.


‘தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.சந்தோஷத்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

