யாழ் பல்கலை கழக பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம்!

365 0
யாழ் பல்கலை கழகத்தின் விடுமுறை வழங்கப்படுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நீர்வாகமே கூடி முடிவு செய்யும் என துணை வேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் துணை வேந்தர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கற்கை நெறிகளைப் புறக்கனித்து நிர்வாக பணி முடக்கத்திலும் மாணவர்கள் ஈடுபட்டவேளையில் ஆராய்ந்த பல்கலைக் கழக  நிர்வாகம் பீடங்களை தற்காலிகமாக முடிவெடுத்திருந்த்து. இதனைத் தொடர்ந்தும் மாணவர் போராட்டம் தொடர்ந்து தற்போது கைவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இருப்பினும் இன்று வழமைபோல் நிர்வாகம் இயங்க ஆரம்பிக்கும்  ஆனாலும் கற்கை நெறிகள் தொடர்பில் அதாவது  மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நீர்வாகம் கூடி முடிவு செய்யும்.
ஏனெனில் பணி முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவர்களது நிலைப்பாடு தொடர்பில் எந்த முடிவும் எழுத்தில் அறிவிக்கவில்லை. அவ்வாறு எழுத்தில் அறிவித்த பின்னரே நிர்வாகத்தின் முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எனவும் தெரிவித்தார்

Leave a comment