ஆறு மாவட்டங்களில் பலத்த மழை

389 0
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீட்டருக்கும் அதிமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன் புத்தளம் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment