ஜனாதிபதிக்கு மகயர் தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடுவோம்

329 0

முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாசத்தால் கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும் ஆனால் கித்துள்ள மரத்தில் கள் இறக்க அனுமதி பெறதேவையில்லை என்ற வர்த்தமானி அறிவித்தலின் பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகயர் அனுப்பி வைக்கவுள்ளதாகவும்  தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடவேண்டிய நிலை ஏற்ப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும் ஆனால் கித்துள்ள மரத்தில் கள் இறக்க அனுமதி பெறதேவையில்லை என்ற கோரிக்கை வடக்கு மாகாண பனைதென்னை வள தொழிலாளர்களையும் சங்கங்களையும் பாதித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வளஅபிவிருத்தி சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் சி.வேதவனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பொன்று இன்று காலை பதினோரு மணியளவில்  முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாச வளாகத்தில் நடைபெற்றது

இதன்போது பனை தென்னைவள சங்க சமாசத்தின் தலைவர் பிரான்சிஸ் விஜயச்சந்திரன்  மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பனைதென்னை வளகூட்டுறவு சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் சி.வேதவனம் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது அரசாங்கம் வர்தக மானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள பனை தென்னையினை நம்பி தொழில் செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்தி 128 குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றார்கள் எங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 256 குடும்பங்கள் நிறுவனங்களை சாந்ந்திருக்கின்ற மகளீர்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்தி 30 குடும்பங்கள் பனைவளத்தினை மூலாதாரமாக கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்ற குடும்பங்கள் ஆயிரத்தி 9 குடும்பங்கள் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்தி 696 குடும்ப அங்கத்தவர்கள்  அரசின் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் ஊடாக மகஜர் ஒன்றினை அனுப்பிவைக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளார்கள் இதன் பிரதிகள் வடமாகாணசபை முதல்வர் மற்றும் வடக்கின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை போத்தல் கள்ளுக்கான வரியினை நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்துள்ளதாகவும் போத்தல் கள் அடைப்பதற்கான நிலையத்திற்கான ஆண்டு அனுமதியும் அதிரித்துள்ளது இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு இதனை நம்பி தொழில் செய்யும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அரசாங்கம் நல்ல பதில் தராவிடின் மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றினையும் நடத்தவுள்ளதாகவும் எனவே நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து இதற்கான சரியான முடிவினை நாங்கள் வேண்டிக்கொள்ள விரும்புகின்றோம் அரசிற்கு உடனடியாக இந்த மகஜரினை அனுப்பிவைக்கின்றோம் என்றும் இன்றைய ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளார்கள்.

Leave a comment