கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

413 0

ஹப்புத்தளையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைச் செய்யப்படவுள்ளார்.

இதனிடையே, ஹப்புத்தளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 43 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காணரங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டவர்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment