சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

212 0

இலங்கை சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா 2017 இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு நன்மை முறையை நடைமுறைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள இலக்கை அடைந்துள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஓய்வூதிய முறைமையின் நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்லுதல் மற்றும் ஓய்வூதிய முன்மொழிவு முறைமையை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை பாராட்டும் வகையில் இந்த விருது விழா வருடாந்தம் நடத்தப்படுகின்றது.

அரச சேவையில் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகளை திட்டமிடுவது இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் பணியாகும். இதன்மூலம் சுய தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள், தனியார் துறையில் சேவை செய்பவர்கள், வெளிநாட்டு சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், கலைஞர்கள், சுதேச மருத்துவர்கள் போன்ற அனைத்து துறைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்பேணல் கண்டி மரபுரிமை அமைச்சின் செயலாளர் ஷிரானி வீரக்கோன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் கீர்த்தி சுரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment