தினந்தந்தி நாளிதழ் பவளவிழாவை முன்னிட்டு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
தினந்தந்தி நாளிதழ் தனது 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் நாளை பிரம்மாண்டமாக பவளவிழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், பவளவிழாவுக்கு தனது வாழ்த்துச் செய்தியில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
இருள் நீக்கும் சூரிய ஒளியாக உறக்கத்தில் இருக்கும் மனிதர்களை செய்திகள் மூலம் விழிக்க செய்து சமூக உணர்வினை ஊட்டும் ஊடகம் தினத்தந்தி. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு என்ற அரிய அணிகலன்களுடன் செய்தி உலகத்தின் அரியணையில் ‘தினத்தந்தி’ அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

