தமிழ் ,முஸ்லீம் மக்கள் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்-மாவை

339 0
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் தகவல் வழிகாட்டி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு அரசியல் யாப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து  தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போதைய அரசியல் யாப்பு முன்மொழிவிலே இணக்கம் காணப்பட்டவையும் உண்டு அதேபோல் இணக்கம் கானப்படாத விடயங்களும் உண்டு. அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி கூறுகின்றார் அனைத்து விடயமும் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுவிட்டதனால் நாடாளுமன்றம் எதற்கு என்கின்றார். எமது முதலமைச்சரோ இந்த யாப்பினை நான் எதிர்க்கின்றேன். இருப்பினும் முழுமையாக படிக்கவில்லை என்கின்றார்.்இதேநேரம் இந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர் முதலமைச்சர். இவ்வாறான ஓர் நிலையிலேயே அரசியல் யாப்பு விவாதம் இடம்பெறுகின்றது.
அதாவது தீர்வு என்னும் குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஆர்வமாக உள்ளனர் ஆனால் அது என்ன பிள்ளை என்பதே தற்போதுள்ள பிரச்சணையாகும். அதிலும் இதனை அதிகம் விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் யாப்பிற்காக எந்தவொரு பங்களிப்பினையும் செய்யாதவர்களே அதிகம் விமர்சிக்கின்றனர்.  இதேநேரம் நாம் 70 போராடினோம் அதிலும் 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடாத்திய இனம். அதன்மூலம்கூட கிட்டாத தீர்வு இப்போது கிடைத்துவிடும் என நான்கூறவில்லை.
ஆனால் முன்னை அரசியல் அமைப்புக்கள்  தமிழ் , முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. அதேபோல் இன , மத உரிமைகள் மறுக்கப்பட்டு நிலம், பேச்சு உரிமைகள் போன்ற பல விடயங்கள் மறுக்கப்பட்டதன் விளைவே சர்வதேச உதவியுடன் ஆட்சி மாற்றப்பட்டது. ஆனாலும் இதில் பல விடயங்களில் முன்னேற்றம் இல்லை. சில சில முன்னேற்றம் மட்டும் உண்டு. இந்த நிலையிலேயே புதிய அரசியல் அமைப்பு முயற்சியும் இடம்பெறுகின்றது.
இதேநேரம் முஸ்லீம் மக்களின் பெருந்தலைவர் அஸ்ரப் அன்று கூறியிருந்தார் தமிழ் மக்கள் இவ்வளவு இழப்பையும் சுமந்து பெறும் தீர்விற்கு நாம் தடையாக இருக்க மாட்டோம் . என்றார். அதேபோல் ரவூவ் ஹக்கீம் அண்மையில் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என கேட்கும் உரிமை கூட்டமைப்பிற்கு உண்டு என்றார். எனவே தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்.
அதாவது தமிழர்களும் முஸ்லீம்களும் இணையும் தீர்வினைப் பெறவேண்டும். ஒற்றையாட்சி தமிழர்களிற்கு விருப்பமே கிடையாது அதேநேரம் சமஸ்டிக்கு சிங்கள மக்களிற்கு விருப்பம் கிடையாது. அதே நேரம் ஏக்க ராச்சியாவிற்கும் தவறான கருத்து கற்பிக்கப்படுகின்றது. இந்த அமைப்பை நிராகரிப்போரிடம் ஏற்க வைப்பதற்கான பொறிமுறை அல்லது மாற்றுத் திட்டம் ஏதாவது உண்டா? எனவே எமது அடுத்த சந்த்தியும் இழப்பை சந்திக்காது இருக்க வேண்டுமானால்  தீர்வை பெறவேண்டும்.
எமது தரப்பில் விமர்சனமும் குறையும் கூறுவதை மட்டும் செய்பவர்கள் ஒருபுறம் என்றால் தென்னிலங்கையில் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு குண்டு போடவேண்டும் என்கின்றார். இன்னொருவரோ அரசியல் யாப்பினை ஏற்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் . என்கின்றார். அப்போ நாமும் இதனையும் நிராகரித்த பின்பு அதனையா ஏற்கப்போகின்றோம்.
இதேநேரம் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவே வெளி மாகாணத்தில் உள்ள முஸ்லீம் உறவைப் பலப்படுத்தும் . என்றார்.

Leave a comment