திலகரட்ன தில்ஷான் ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்

453 0

B7YOrdkCYAAPZlzஇலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திலகரட்ன தில்ஷான் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியுடன் தம்புள்ளையில் நடைபெறவுள்ள 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் மற்றும் 20க்கு 20 போட்டிகளின் பின்னர் தாம் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வுப்பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

1976ஆம் ஆண்டு களுத்துறையில் பிறந்த தில்ஷான், 87 டெஸ்ட் கிரிக்கட்போட்டிகளில் பங்கேற்று 8379 ஓட்டங்களைப்பெற்றுள்ளார்.

329 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள அவர், 10ஆயிரத்து 248 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

20க்கு 20 சர்வதேச போட்டிகள் 78இல் பங்கேற்றுள்ள அவர் 1884 ஓட்டங்களை பெற்றுள்ளார்.