யாழ்.மாவட்டத்தில் முதன் முதலாக மாணவிகளுக்கு கருப்பை கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கருப்பை கழுத்துப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை அடுத்து இந் நோயைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ள சுகாதார அமைச்சு மாணவிகளுக்கு இளம் வயதில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் முதன் முதலாக வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் ௬ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 44 மாணவிகளுக்கு கல்லூரியில் வைத்து கருப்பைகழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பிராந்திய தொற்றுநோய்த் தடுப்பு அதிகாரி உட்பட சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

