யாழில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு

267 0

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்திலேயே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 30 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 17 சிறுவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 24 சிறுவர்களுமாக மொத்தமாக 87 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ் மாவட்டத்தில் 7 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்களும்  மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 5 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 8 சிறுவர்களுமாக மொத்தம் 32 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதே போன்று உடல் ரீதியான முறைகேட்டுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 11 சிறுவர்களும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 சிறுவர்களும்  மன்னார் மாவட்டத்தில் 14 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 8 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 11 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்ப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் ஒருவரும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும்   மன்னார் மாவட்டத்தில் 11 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 24 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடப்பாண்டில் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக யாழ் மாவட்டத்தில் 3 சிறுவர்களும்   மன்னார் மாவட்டத்தில் 2 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 5 சிறுவர்களுமாக மொத்தம் 10 சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் என யாழ் மாவட்டத்தில் 23 சிறுவர்களும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 சிறுவர்களும்   மன்னார் மாவட்டத்தில் 6 சிறுவர்களும்  வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 4 சிறுவர்களுமாக மொத்தம் 53 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய சிறுவர்கள்  யாழ் மாவட்டத்தில் 23 சிறுவர்களும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 சிறுவர்களும்   மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் 9 சிறுவர்களும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 17 சிறுவர்களுமாக மொத்தம் 48 சிறுவர்கள் இடைவிலகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடப்பாண்டில் நீதிமன்ற வழக்குகள்  யாழ் மாவட்டத்தில் 832 வழக்குகளும்   முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 வழக்குகளும்  மன்னார் மாவட்டத்தில் 386 வழக்குகளும்  வவுனியா மாவட்டத்தில் 478 வழக்குகளும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 131 வழக்குகளுமாக மொத்தம் 1870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Leave a comment