கைக்குண்டை வைத்திருந்த குடும்பத்தலைவருக்கு சிறைத் தண்டனை

352 0
வடமராட்சி, அல்வாய் பகுதியில் கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குடும்பத் தலைவருக்கு 8 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனைக் கருத்தில் எடுத்தே குற்றவாளிக்கு 8 மாதங்களாக தண்டனைக்காலம் குறைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

Leave a comment