அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 29-ம் தேதி டெல்லி வருகை

469 0

201608251136409120_US-Secretary-of-State-John-Kerry-visits-India_SECVPFபுதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார்.

புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 29-ம் தேதி புதுடெல்லி வருகிறார்.

முன்னதாக, வங்காளதேசத்துக்கு செல்லும் அவர் அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் அமெரிக்கா – வங்காளதேசம் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் வங்காளதேசத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர், 29-ம் தேதி புதுடெல்லி வரும் ஜான் கெர்ரி மற்றும் அமெரிக்க வணிகத்துறை செயலாளர் பெனி பிரிட்ஸ்கர் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வணிகம் மற்றும்  தொழில்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.

புதுடெல்லியில் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெறும் இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த மூத்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.