சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் போலீசில் சரணடைந்தான்

367 0

201608251033239101_Hostage-taker-at-Moscow-bank-turns-himself-in_SECVPFரஷியாவின் கிரெம்ளின் நகரில் சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் இறுதியாக போலீசில் சரணடைந்தான்.ரஷியாவின் கிரெம்ளின் நகரில் உள்ள சிட்டி பேங்க் கிளைக்குள் குடிபோதையில் புகுந்த ஒருவன் அங்கிருந்த மூன்று ஊழியர்களையும், ஒரு வாடிக்கையாளரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
கழுத்தில் ஒரு மர்மப் பொருளை கட்டியிருந்த அவன் அந்த வங்கியை வெடிகுண்டால் தகர்த்து விடுவதாக மிரட்டினான். பல மணி நேரமாக அவனிடம் சமரசம் பேசிய போலீசார் முதலில் 2 பேரை சாதுர்யமாக மீட்டு, வெளியே வரவழைத்தனர். பின்னர், வங்கிக்குள் நுழைந்த அதிரடிப் படையினர் மேலும் இருவரையும் பத்திரமாக விடுவித்தனர்.

பின்னர், குடிபோதையில் இருந்த அந்த நபர் போலீசில் சரணடைந்தான். ரஷியாவில் ஏராளமான பிரச்சனைகளும், பெருகிவரும் ஊழலும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. இதை உலக மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இப்படி நடந்து கொண்டதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பெட்ரோல் விலை வீழ்ச்சியாலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளதாலும் ரஷியாவின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில் அங்கு நாளுக்குநாள் ஊழலும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.