பருவமற்ற காலத்தில் உருளைக்கிழங்கு செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
நாட்டில் உருளைக்கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் பருவத்தில் வெளிநாட்டிலிருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து விசேட செயற்திட்டமொன்றினை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
கடந்த ஒன்றரை வருட காலத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெற்களை வழங்கும் விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

