தெற்கின் அபிவிருத்திக்கு 1500ஏக்கரை கோரியுள்ள சீனா – ரணில்

314 0

1440133302-1774தெற்கு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கமானது 1500 ஏக்கர் நிலத்தை கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல, இரத்தினபுரி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், குறித்த இடங்களைப் பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையை அண்மித்து முன்னெடுக்கப்படும் தொழில் வலயங்களை அமைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட பிரதேசம் மற்றும் வனஜீவராசிகள் வலயம் போன்றவற்றை தவிர்த்து இடங்களை தெரிவு செய்யமாறும்,காட்டு யானைகள் செல்வதற்காக மாற்று வீதிகளை அமைக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்குவது வரி அடிப்படையில் என்றும், இதனால் நீண்ட காலத்திற்கு வரி பெறமுடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பீ.ஓ.ஐ வர்த்தக வலையமும் அதற்காகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சீனாவுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தால் அதிகம் முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்றும் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்