யாழ்.மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கனேசநாதன்

287 0

DSC05790சங்குவேலியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்ச உணர்வு நீக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கனேசநாதன் தெரிவித்துள்ளார்.
சிவில் உடைகளிலான பாதுகாப்பினை, இரவு, பகல் விசேட ரோந்தினை அடுத்து பொது மக்களுக்கான முழுமையான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்:-
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் காலை பொது மக்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் அப்குதியில் உள்ள கிராம சேவகர்கள், சிவில் அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாலில் கலந்து கொண்டவர்கள் வாள்வெட்டுக் குழுக்கள் தொடர்பில் தமக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வுகள் தொடர்பாக தெரிவித்திருந்தனர். அத்துடன் அவர்களை கைது செய்வதற்கான தமது ஒத்துழைப்புக்களையும் அவர்கள் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் இவ்வாள்வெட்டுக் கொலை சம்பவத்தினை அடுத்து, மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரவு, பகல் நேர ரோந்து நடவடிக்கைகளும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளுக்க அமர்த்தப்பட்டு பொது மக்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடுகள் மூலமும், கொலைச் சம்பவத்திற்கு பின்னர் வேறு எந்த குழப்பமான நிகழ்வுகளும் நடைபெறாததை அடுத்து பொது மக்களுக்கான முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது உறுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.