யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்

55 0

625.500.560.350.160.300.053.800.900.160.90யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ், சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எடுத்த முயட்சி சிங்கள மாணவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் வடமாகாண ஆளுநரின் செயற்பாட்டால் தோல்வியடைந்துள்ளது.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் நடைபெற்றிருந்தது. இம் மோதல் சம்பவத்தில் சிலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு தரப்பு மாணவர்களும் பொலிஸாரிடத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு தரப்பினர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இம் மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்க பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கற்றல் செயற்பாடுகளும் முழு அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதற்கான முயட்சிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
குறிப்பாக பல்ககைல்கழக நிர்வாகத்தினர், மாணவர்கள் தரப்பினர்களும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினைச் சந்தித்தும் சில முடிவுகளை எடுத்திருந்தனர்.
இதன்படி மோதில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர்களையும் அழைத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இரு தரப்பினர்கள் மத்தியலும் சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.
இப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் பொலிஸாரிடத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் வாங்குவது தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டது. இக் கருத்துடன் தமிழ் மாணவர்கள் ஒன்றுபட்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் வைத்து சிங்கள மாணவர்களும் முறைப்பாட்டினை வாபஸ் பெறுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது தொடர்பாக எழுத்து மூல ஆவணங்கள் தயாரிப்பிற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தங்கள் நிலமைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே அக்கறையுடன் செயற்படுகின்றார் என்றும், அவரின் சம்மதம் இல்லாமல் எந்தவிதமான ஆவணங்களையும் தாம் வழங்க மாட்டோம் என்று சிங்கள மாணவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பு மாணவர்களையும் சமரசப்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை சிங்கள மாணவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முயட்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில் பல்கலைக்கழக மோதல் சம்வத்தில் சிங்கள மாணவர்களை தாக்கினார்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட் 3 தமிழ் மாணர்களுடைய வழக்கு இன்று யாழ்.நீதிமன்றத்தில் எழுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.