கேட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு: நீக்கப்பட்ட தலைவர்கள் போட்டியா?

300 0

ஸ்பெயினில் இருந்து தனிநாடாக பிரிந்து விட்டதாக அறிவித்த கேட்டாலோனியா பாராளுமன்றத்தை கலைத்துள்ள ஸ்பெயின் அரசு தற்போது அங்கு மறுதேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளது.

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கேட்டாலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது. அதற்கு 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கேட்டாலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கார்லஸ் பூட்ஜியமோண்ட்
தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கேட்டாலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும், கேட்டாலோனியா நிர்வாகம் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் ஸ்பெயின் அரசு அறிவித்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் 21-ம் தேதி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் கேட்டாலோனியா தலைவர் பூட்சியமோண்ட் போட்டியிட வேண்டும் என ஸ்பெயின் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தேர்தலை தனிநாடு ஆதரவாளர்கள் புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a comment