தலதா மாளிகை வளாகத்தில் வேண்டுதல்

1674 0
 அரசிலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராக தேசாபிமான பிக்குகள் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தலதா மாளிகை வளாகத்தில் இன்று வேண்டுதலில் ஈடுபட்டன.
இதன்பின்னர் கருத்த வெளியிட்ட தேசபிமான பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர்,
புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை பிரிப்பதைப் பற்றி பேசுகின்றனர்.
எனினும், அவர்கள் இந்த நாட்டை ஆதரப்பவர்களாக இருப்பார்களாயின், கொண்டுவரப்பட உள்ள அரசியலமைப்பு எதிராக வாக்களிக்குமாறு அவர்களிடம் தாம் கேட்பதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டணியும் இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு கிராம பகுதிகளுக்கு வர வேண்டாம் என்று பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a comment