அரசியலமைப்பு வழிகாட்டல் சபையில் அங்கம் வகித்த படி, அதன் நடவடிக்கைகளை மந்தப்படுத்தி, அதன் மூலம் அரசாங்கத்தின் புகழை குறைப்பதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குறிக்கோள் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்கள் என்ன என்பதை அறிந்து, அது குறித்த விடங்களை மக்களுக்கு கூற முடியும் என்பதாலேயே, அரசியலமைப்பு வழிகாட்டல் சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அங்கம் வகித்து வருவதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாம் வெளிப்படுத்திய விடயங்களைக் கொண்டே பௌத்த மகா சங்கத்தினர் புதிய அரசியலமைப்பில் இருக்கும் ஆபத்தை அறிந்துக் கொண்டனர் எனவும் கம்மன்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

