பிரேசிலில் பங்கி ஜம்பிங் 245 பேர் ஒரே நேரத்தில் குதித்து சாதனை

172 0

பிரேசிலில் பங்கி ஜம்பிங் 245 பேர் ஒரே நேரத்தில் கயிறு கட்டியபடி கீழே குதித்தனர். 30 மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள இப்பாலத்தில் இருந்து அவர்கள் குதித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஹோர் டோலாண்டியா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மிக நீண்ட பாலத்தில் கயிறு கட்டி கீழே குதிக்கும் சாகச விளையாட்டு நடப்பது வழக்கம்.

பங்கி ஜம்பிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விளையாட்டில் சாகச விரும்பிகள் அதிகம் பேர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விளையாட்டில் புதிய சாகசத்தை நிகழ்த்த பிரேசில் மக்கள் விரும்பினர். அதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்யவும் தீவிரம் காட்டினர்.

அதன்படி ஹோர் டோலான்டியா பாலத்தில் இருந்து 245 பேர் ஒரே நேரத்தில் கயிறு கட்டியபடி கீழே குதித்தனர். 30 மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள இப்பாலத்தில் இருந்து அவர்கள் குதித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாகசம் கின்னஸ் சாதனைக்காக செய்யப்பட்டது. ஏற்கனவே இதே போல் 149 பேர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்து குதித்து சாதனை படைத்து இருந்தனர். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave a comment