பிணை முறி ஆணைக்குழுவின் காலம் அதிகரிப்பு

328 0

பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவடையவிருந்த நிலையில, ஜுலை 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை மீண்டும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால எல்லையும் நிறைவடைய இன்னும் இரு தினங்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a comment