இராஜாங்க அமைச்சருக்கு எதிராக மேல்நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல் 

224 0

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது.

மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யானைக்குட்டி ஒன்றை சட்டவிரோததமான முறையில் வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தபோதும், முறைப்பாட்டின் பிரதிவாதியான முதலாவது சாட்சியாளரான இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இராஜாங்க அமைச்சருக்கு மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

Leave a comment