மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும்- நிமால் சிறிபால டி சில்வா

212 0

புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் போது, மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை.

ஆனால் அதற்கு முன்னர் அது குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும், ஜே விபி யும் கோரி வருகின்றன.

ஆனால் சிறிலங்கா சுதந்திர கட்சியானது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.

அதிகாரப் பகிர்விற்கு சுதந்திர கட்சி எதிர்ப்பில்லை.

ஆனால் இதன் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டாலும், அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே அமைய வேண்டும்.

அதேநேரம் ஒற்றையாட்சி முறைமையும், பௌத்தத்துக்கான முன்னுரிமையும் தற்போது இருப்பதைப் போன்றே தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment