காபூலில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

375 0

மேற்கு ஆபிரிக்காவின் நைஜர் – மாலி நாடுகளின் எல்லையோரத்தில் உள்ள அயோரோவ் கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக நைஜர் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, மேலும் 5 காவல்துiறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மாலியில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் உந்துருளிகளில் எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகளே காவல்துறையினர் மீது இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால், கடந்த 4 ஆம் திகதி தீவிரவாதிகள் அமெரிக்க துருப்பினரை குறிவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரு பள்ளி வாசல்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் ஸ்தலத்திலேயே பலியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலர் மரணமானதையடுத்தே பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவதரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலில் மொத்தம் 39 பேர் பலியானதாக நேற்று உள்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் நஜிப் டேனிஷ் தெரிவித்திருந்தார்.

Leave a comment