நல்லாட்சி என்ற சொல்லுக்கே பாரிய அவப்பெயர்- கலாநிதி நிர்மால் ரஞ்ஜித்

202 0

நல்லாட்சி என்ற சொல்லுக்கே இந்த அரசாங்கம் பாரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரான இவர், இன்றைய தேசிய வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை மக்கள் ஆட்சியில் அமர்த்துவதற்கு காரணம் இந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அல்ல. மாறாக, மஹிந்த ராஜபக்ஷாக்களின் ஆட்சியில் சில அம்சங்கள் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பே ஆகும்.

ஐக்கிய தேசியக் கட்சி தனியாகப் போட்டியிட்டிருந்தால், அக்கட்சி படுதோல்வியை அடைந்திருக்கும். இந்த அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் பற்றிய மக்களின் நம்பிக்கை அமைச்சரவை அமைத்தவுடன் இழக்கப்பட்டது.  மத்திய வங்கி முறி மோசடியின் போது இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும் அவர் தனது நீண்ட செவ்வியில் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a comment