கூட்டத்துக்கு வராவிடின் மஹிந்த உட்பட சகலரும் வெளியே- முக்கிய அமைச்சர் தகவல்

392 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கீழ் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாகவும், இக்கூட்டத்துக்கு வருகை தராதவர்கள் ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவதற்கு கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான செயற்பட தீர்மானம் எடுப்பார்களாயின் கட்சி என்ற வகையில் ஸ்ரீ ல.சு.க. எடுக்க வேண்டிய நடவடிக்கையை முன்னெடுக்கும் என அக்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இக்கூட்டத்துக்கு இதுவரையில் தங்களுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லையென கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பலரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment