சிவனொளிபாதமலைப் பிரதேசத்தை எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் உட்படாத விஷேட வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுவதற்கு பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்தவாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிவனொளிபாதமலை அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் வருகிறது. அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டால், சிவனொளிபாதமலை மஸ்கெலியா பிரதேச சபைக்குள் அடங்கும்.

