இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் டெல்லி பயணம்

290 0

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அடுத்தமாதம் (நவம்பர்) 10-ந்தேதிக்குள் முடிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், தினகரன் அணியிடமும் ஏற்கனவே இரண்டு கட்ட விசாரணை நடத்தி இருக்கின்றன. இரு அணியினரும் ஏராளமான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார்கள்.

கடந்த 16-ந்தேதி இருதரப்பு வக்கீல்களின் வாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.விசாரணை முடிந்து விட்டதால் நாளை (23-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இரட்டை இலை கிடைத்ததும் தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார்.இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளார்கள்.

அதிக எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் இரட்டை இலை அவர்களுக்கு வழங்கவே வாய்ப்பு அதிகம் என்ற கருத்து நிலவுகிறது.

அந்த நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டனர்.

Leave a comment