இரு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒன்று, நேற்று மாலை கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்று, அதிவேகம் காரணமாக வீதியை விட்டு விலகி இருவரை மோதுண்டுள்ளது.
இதன்போது, விபத்துக்குள்ளான இருவரும் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சிற்றூந்தின் சாரதிக்கு நித்திரை சென்றுள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.
சந்தேக நபரான சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மீரிகம – திவுலபிடிய வீதியில் கிதுல்வல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள மற்றும் ஓர் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன், உந்துருளி ஒன்று மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்த 22 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

