தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை!

214 0

தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை. அத­னால் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என்று வீட்­டுத் திட்­டப் பய­னா­ளி­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.

பூந­கரி பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்ட தெளி­க­ரை­யில் நிரந்­த­ரக் காணி­கள் இல்­லா­தி­ருந்த குடும்­பங்­கள் தெரிவு செய்­யப்­பட்டு அரை நிரந்­த­தர வீட்­டுத் திட்­டம் வழங்­கப்­பட்­டது. பிர­தேச செய­ல­கத்­தால் காணி­கள் வழங்­கப்­பட்­டன.

அரச சார்­பற்ற நிறு­வ­னம் 1 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான வீட்­டுத் தள­பா­டங்­களை வழங்­கி­யது.

கிளி­நொச்சி மாவட்ட தேசிய வீட­மைப்பு அதி­கார சபை மாதாந்­தம் தவ­ணைப் பண­மாக ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்ற நிபந்­த­னை­யு­டன் 1 லட்­சம் ரூபா கடன் வழங்­கி­யது.

இந்த வீடு­க­ளில் இரு அறை­கள் மட்­டும் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. சமைய­ல­றையோ, விறாந்­தையோ அமைக்­கப்­ப­டாது அத்­தி­பா­ரம் இடப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

“சமைப்­ப­தற்கு சமை­ய­லறை இல்லை. முன்­பக்­கத்­தில் (விறாந்தை) கல் வைத்­துக் கட்­டப்­ப­ட­ வில்லை. மழை காலத்­தில் மழைச் சாரல் வீட்­டுக்­குள் அடிக்­கின்­றது. சுவர்­கள் பூசப்­ப­ட­வில்லை. அத­னால் விச ஜந்­துக்­கள் சுவ­ரால் ஏறி வீட்­டுக்கு வரும் நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. எமது காணி­க­ளுக்­குப் பின்­பு­றம் காடு உள்­ள­தால் பாம்­பு­கள் அதி­க­ள­வில் இங்கு நட­மா­டு­கின்­றன. முற்­றத்­தில் நிற்­கும் மரங்­க­ளில் கூடப் பாம்­பு­கள் சர்­வ­சா­தா­ர­ண­மா­கக் காணப்­ப­டு­கின்­றன. எமது பிரச்­சி­னை­க­ ளுக்­கான தீர்வை உரிய அதி­கா­ரி­கள் வழங்க வேண்­டும்.”- என்று வீட்­டுத் திட்­டப் பய­னா­ளி­கள் தெரி­வித்­த­னர்.

“2015ஆம் ஆண்டு கிடைத்த திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் காணி­யற்­ற­வர்­கள் தெரிவு செய்­யப்­பட்டு அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் வழங்­கப்­பட்­டது. அவர்­க­ளின் விருப்­பத்­துக்கு இணங்­கவே வழங்­கப்­பட்­டது. போதி­ய­ளவு வீட்­டுத் திட்­டங்­கள் எமக்­குக் கிடைத்­தால் அவற்றை அவர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.”- என்று பூந­க­ரிப் பிர­தேச செய­லர் கிருஸ்ணேந்திரன் தெரி­வித்­தார்.

Leave a comment