நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செல்ல அனுமதி

193 0
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி வரையில் அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவரது கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அதேநேரம் நிஸ்ஸங்க சேனாதிபதி, அனைத்து வழக்கு விசாரணைகளின் போதும் நீதிமன்றத்தில் ஆஜராகுவது கட்டாயமானது என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அதனை மீறினால் வெனிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

335 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை சம்பந்தமாக நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு டிசம்பர் மாதம் 06ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment