சோமாலியா வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

409 0

சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த 14-ம் தேதி 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் சபாரி என்ற ஓட்டல் உள்ளது. இது மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி. இது வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை அந்த ஓட்டல் மீது மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். இதனால் ஓட்டலின் பெரும் பகுதியும், அதனருகே இருந்த கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகின. சாலையில் நிறுத்தியிருந்த கார்கள், லாரிகள், வேன்கள் எரிந்து சேதமாகின.

இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 276 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் மொகடிசுவில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 56 பேரை காணவில்லை. மேலும், 230 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment