எகிப்து: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 35 போலீசார் பலி

291 0

எகிப்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 35 பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக போலீஸ் மற்றும் ராணுவத்தின் மீது நடத்தப்படுகிறது.

இந்நிலையில், எகிப்தின் எல்-வாகட் பாலைவனத்தில் உள்ள கிசா நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருபதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போலீஸ் படைகள் இருப்பதை அறிந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸ் படையும் பதில் தாக்குதல் நடத்தினர்.

போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 போலீசார் பரிதாபமாக மரணமடைந்தனர். தீவிரவாதிகளிலும் சிலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a comment